Thiru Kozhi
Specialities : 108 holiest vishnavite shrines |

கோயிலின் மூலவர் அழகிய மணவாளப் பெருமாள். பெயருக்கேற்றவாறு கண்ணுக்கும் மனதிற்கும் இனியவராகவே காட்சித் தருகின்றார். நின்று சேவை சாதிக்கும் திருக்கோலம். சக்ரத்ததை ப்ரயோகிக்கும் நிலையில் இருக்கின்ற கோலம். வடக்கே திருமுகமண்டலம், தாயார் கமலவல்லி நாச்சியார் மற்றொரு பெயர் உறையூர் வல்லி என்பதாகும். இந்த கோயிலில் தாயாருக்கென்று தனி சந்நிதி எதுவும் இல்லை. சதாசர்வகாலம் அருள் பொங்கும் புன்னகைத் திருக்கோலத்தில் காட்சி அளிக்கிறார்.
கல்யாணத் தீர்த்தம், சூரிய புஷ்கரிணி, குடமுருட்டி நதி இந்தக் கோயிலின் தீர்த்தங்களாகும். தேவர்களுக்கெல்லாம் அருள்பாலிக்கும் திருத்தலம் என்ற பெருமைகயும் இதற்கு உண்டு. கோயிலின் விமானம் கல்யாண விமாணம் என்றழைக்கப்படும்.
சோழ மன்னரின் திருமகளான கமலவல்லிக்கு பெருமாள் மீது தீராத காதல். மணந்தால் பெருமாளைத் தான் மணப்பேன் என்று கடுமையான விரதம் பூண்டாள். எத்தனை பேர் தடுத்தாலும் கேட்காமல் விரதம் எல்லை மீறித் தாண்டிப் போக இனியும் கமலவல்லியை சோதிக்கக்கூடாது என்று அழகிய மணவாளப் பெருமாள், மனம் இறங்கி கமலவல்லியைத் திருமணம் செய்து கொண்டதாக வரலாறு கூறுகின்றது. திருமணத்திற்குப் பின் கமலவல்லி - நாச்சியார் என்று புதுப் பொலிவு பெற்றார்.
திருப்பாணாழ்வார் அவதாரம் செய்த திருத்தலம் என்பதால் அவருக்கும் இங்கு ஒரு தனி சன்னதி இருக்கின்றது. ஆண்டுதோறும் பங்குனி உத்தரத்திற்கு முதல் நாள் ஸ்ரீரங்கத்திலிருந்து ஸ்ரீரங்கநாத உத்ஸவமூர்த்தி இந்தக் கோயிலுக்கு எழுந்தருளியிருந்து கல்யாண உற்சவம் கண்டு பக்தர்களை அருள்பாலிப்பது வழக்கம். மிகவும் பழமையும் அபாரமான சக்தியையும் உள்ளடக்கிய இந்த திருஉறையூர் அழகிய மணவாளப் பெருமானுக்கு திருமங்கையாழ்வாரும் குலசேகர ஆழ்வாரும் மங்களாசாசனம் செய்திருக்கிறார்கள்.
பரிகாரம் : முற்பிறவியின் தோஷம் காரணமாக திருமணம் நடக்காமல் தவித்துக் கொண்டிருப்பவர்களுக்கும், திருமணமாகி சூழ்நிலையால் பிரிந்து வாழ்பவர்களுக்கும், இளம் வயதிலேயே தோல் நோயால் துன்பப்படுகிறவர்களுக்கும் அழகிய குழந்தை அறிவுள்ள குழந்தை பிறக்க வேண்டும் என்பவர்களுக்கும் அனுக்கிரகம் கிடைக்கும் ஒரே கோயில் இந்த அழகிய மணாளப் பெருமாள் கோயில் தான். குறிப்பாக புதன், சனி கிழமைகளில் இந்த கோயிலுக்கு வந்து தரிசனம் செய்பவர்களுக்கு அடுத்த பிறவி என்பது இருக்காது என்று நம்பப்படுகின்றது.
Area : Trichy | Bus Route : |
Approx. 3 kms from Trichy |
:
|
|||
1G.K.MahendranOn 18/08/2010
![]() Title : சோழநாட்டு திருப்பதி
What a real story become a great story .
G.K.Mahendran
|
|||
Related Temples
Copyright © 2010 Thiruhalam.com